Feed Item
·
Added a news

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீடுகளுக்கு பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டம் இடமளிக்கவில்லை என்றும் ஐந்து பேருக்கு மேற்படாத குழு மாத்திரமே வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுகின்றமை தொடர்பிலும் அவர் தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

000

  • 1171