Feed Item

தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 24 ஆம் தேதி

மேஷம் -ராசி:

வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம் ராசி:

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் அனுசரித்துச் செல்லவும். சகோதரர் வகையில் ஆதரவு ஏற்படும். வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். புதியவர்களின் அறிமுகங்களால் உற்சாகம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

மிதுனம் -ராசி:

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் சில மாற்றங்கள் மனதளவில் ஏற்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

கடகம் -ராசி:

மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். இடமாற்ற முயற்சி கைகூடும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம் -ராசி:

அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி -ராசி:

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மாற்றமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தீர்வு காண்பீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம் -ராசி:

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். உத்தியோக செயல்களில் துரிதம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

விருச்சிகம்- ராசி:

குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலை ஆட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுகள் வேண்டும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். கலைப் பொருட்கள் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்

 

தனுசு -ராசி:

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். இறை பணிகளில் மதிப்பு கிடைக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகரம் -ராசி:

வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

கும்பம் –ராசி:

புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். அரசு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவு பிறக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம் -ராசி:

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 1163