Feed Item

நைட்டு சாப்பாடு என்ன?"

"தோசை தான்.."

"தொட்டுக்க என்ன குழம்பு?"

"புதினா மல்லி சட்னி.. தக்காளி சட்னி.."

"வாவ்.. எப்பவும் ஏதாவது ஒரு சட்னி தான் வைப்ப.. இன்னைக்கு 2 வச்சுருக்கியே.. என்ன விசேஷம்?!"

"ஆமாப்பா.. இத்தனை வருஷமா நான் உங்களுக்கு ஒண்ணுமே செய்யாம பட்டினி போட்டேன் பாருங்க..ஏதோ காணாதத கண்ட மாதிரி விசேஷமானு வேற கேட்குறீங்க.."

"சாரி மா.. தெரியாம சொல்லிட்டேன்.."

"இல்ல நீங்க தெரிஞ்சே தான் பேசுறீங்க என்னை.."

"என்ன இது சட்னி ரெண்டும் பிளாஸ்டிக் டப்பால இருக்கு.."

"ஆமா.. காலைல சாப்பிட ஹோட்டலில் பொங்கல் வாங்கினேன். அதுக்கு போய் தொட்டுக்க புதினா சட்னியும் தக்காளி சட்னியும் தர்றானுங்க... குப்பைலயா போட முடியும்?! அதான் உங்களுக்கு எடுத்து வச்சேன்.. நீங்க சாப்பிடுங்க.."

கணவன்.....!!!!!!

  • 1586