மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM‘ நேற்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம் கொண்ட இந்தக் கப்பலானது, 20 அடி கொள்கலன்களை சுமக்கக் கூடியது எனவும், இதனை ஆசியாவின் நங்கூரமிட ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே முடியும் என்றும் அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆழ்கடல் முனையமாக கொழும்பு துறைமுக, கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட்டு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதனாலேயே தற்போது இந்தப் பெரிய கப்பலை நங்கூரமிட முடிந்துள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் பயனாக சீனா - ஐரோப்பா - மத்திய தரைக்கடல் சார்ந்த வர்த்தக பாதையில் இலங்கையின் முக்கியத்துவம் நிரூபிக்கப்படுவதால் புதிய சந்தைவாய்ப்பு, முதலீடுகள், தொழில்வாய்ப்பு போன்றன இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்
000
- 1920