Feed Item
·
Added a recipe

ஒரு நாண் ஸ்டிக் கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி மாவை லேசாக வறுக்கவும்.

வறுத்த கடலைமாவை மற்றொரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதே கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்.

சர்க்கரை கரைந்ததும் அதனுடன் எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி கலக்கவும்.

கலவை கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு வறுத்த மாவை கொட்டி கைவிடாமல் கிளறவும்.

கடலைமாவு கலவை கெட்டியாகி சட்டியில் ஒட்டாமல் எண்ணெயை வெளியிடும்போது அடுப்பை அணைக்கவும்.

இதனை ஒரு சதுரமான தட்டில் கொட்டி சமப்படுத்தி விடவும். லேசாக ஆறியதும் துண்டுகள் போடவும்.

சூப்பரான டேஸ்டியான மைசூர்பாக்கு ரெடி

  • 1590