முல்லைத்தீவு - மாங்குளம் - துணுக்காய் பகுதியில் நில கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்ற முற்பட்ட போது ஏற்பட்ட வெடிப்பில் நேற்றைய தினம் (05) குறித்த நால்வரும் காயமடைந்தனர்.
காயமடைந்த 4 பேரும் பெண் பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
000
- 1178