Feed Item
·
Added a news

உக்ரைனுடனான போர் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியா முழுமுயற்சியுடன் செயற்படுவதாகவும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வாடிவோஸ்டோக்கில் நடந்த கிழக்கத்திய பொருளாதார அரங்கின் உச்சிமாநாட்டின் உள்ளடக்கங்களை புடின் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்துவதற்கு உக்ரைன் தயாராக இருந்தால் தானும் அதற்கு தயார் எனவும் புடின் கூறியுள்ளார்.

இதேவேளை, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ரஷ்ய தூதரும், புடினின் தனிப்பட்ட செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பிஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கு அவர் உக்ரைனிய ஜனாதிபதி செலென்ஸ்கியையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 881