அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர்.
குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரை ஜோர்ஜியா காவல்துறையினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.
சுமார் 1,900 மாணவர்கள் பயிலும் குறித்த பாடசாலையில் அமெரிக்க நேரப்படி முற்பகல் 10.20 அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
000
- 1150