Feed Item
·
Added a news

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழரசு கட்சியின் உடய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நாடாளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை வைதிருந்தார்.

அது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெற்று வரும் நிலையில் தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்தபோது குறித்த பிரேரணியை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.

இவ்வாறான நிலையில் இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் சுமந்திரன் நாள் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த இந்த ஒத்திவைப்பு சிலவேளை தமிழரசு கட்சியை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதான அறிவிப்பு வெளியாகியமை தாக்கத்தை செலுத்தி இருக்கலாம்.

ஏனெனில் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் மாகாண சபை தொடர்பான விவாதத்தம் சிலருக்கு தேவையாக இருக்கலாம் மற்றொரு தரப்பினர் அதை விரும்பாமல் இருக்கலாம்.

இருந்தாலும் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை இறுதியாக இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என தெரிந்தும் அதற்கு முன்னரே சஜித் பிரேமதாசாவின் ஆதரவு அறிவிப்பை சுமந்திரன் வெளியேற்று விட்டார்.

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வரும் நிலையில் பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும் நிலையில் தமிழ் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது.

13 வது திருத்தம் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஆரம்ப புள்ளி என அன்றிலிருந்து அதே நிலைப்பாட்டையே கூறி வருகிறேன்.

ஆனால் தமிழ் மக்களை ஏகப்பிரதிநிதிகள் என கூறுவோர் 13-ஐ தும்புக்கட்டையாலும் தொட்டுப் பாக்க மாட்டோம் என கூறிவிட்டு கடந்த மாகாண சபையில் தமிழ் இனத்தை பெற்று தர போகிறோம் என மக்களை உசிப்பேற்றி வாக்குகளை பெற்றார்கள்.

இறுதியில் மாகாண சபையை நடத்த முடியாமல் கட்சி ரீதியாகப் பிரிந்து நின்று சண்டை பிடித்ததும் தமக்கு ஆடம்பர வாகனம் வேண்டும் என அயல்நாடு ஒன்றுக்கு கடிதம் அனுப்பியதுமே நடந்தது.

சக தமிழ் காட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க விடாது தமது அரசியல் இருப்பு கலை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்துக்கு காலம் மக்களை உசுப்பேத்தி அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்கள்.

இனியும் அவர்களின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ஏனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பதில்களை மக்கள் தமது வாக்குகளால் வழங்கியுள்ளார்கள்.

எனது அரசியல் பயணம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது இலக்கு.

ஆகவே தமிழ் மக்கள் தமக்கான ஜனாதிபதியை தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி சிறந்த ஒரு முடிவை எடுப்பார்கள் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1184