தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 20 ஆம் தேதி
மேஷம் -ராசி:
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கடன் சார்ந்த இன்னல்கள் விலகும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலை ஏற்படும். சொத்து விஷயங்களில் லாபம் மேம்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு
ரிஷபம் ராசி:
நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். புரிதல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மிதுனம் -ராசி:
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம் -ராசி:
எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
சிம்மம் -ராசி:
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி -ராசி:
ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் சில மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். செய்தொழில் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். கருத்துகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெளிவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம் -ராசி:
அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். வியாபார ரீதியாக நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்- ராசி:
முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை தரும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு -ராசி:
செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனை ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த கண்ணோட்டம் பிறக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம் -ராசி:
வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நுணுக்கமான செயல்களில் புரிதல் மேம்படும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை மேம்படுத்தும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம் –ராசி:
தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
மீனம் -ராசி:
குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இணைய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பொன், பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 1191