ஒருமாசமா நினைச்சுண்டேதான் இருக்கேன் . இன்னைக்கு எப்படியும் செஞ்சு முடிக்கறதுன்னு புறப்பட்டேன் . கூப்பிடு தூரம்தான் . என்று கிளம்பிவிட்டேன் .
கிளம்பும்போது என்னவள் எட்டிப்பார்க்க ,எப்போது எங்கே? என்று கேட்க மாட்டாள் .'அஞ்சு நிமிஷம்' என்று சொல்லிவிட்டு வாசல் வந்தேன்
'ச்சீ ...என்ன இது குழந்தை மாதிரி ?' என்று பட்டது ....ஆசை யாரைவிட்டது.
வந்தாகிவிட்டது .
ஆள் நடமாட்டமே இல்லை ; அமைதி ..அமைதி பேரமைதி . கொஞ்சமாய் தடங்கள் வெள்ளி நிறம் போல மாறி எல்லாம் புதுசு போல போல பட்டது .
எதுவும் வருவதாய்த் தெரியவில்லை ; விட்டுப்போக மனசும் இல்லை ; பார்ப்பது என்று வெட்கம் விட்டு வந்தாயிற்று ,பொறுமையாய் இருமனமே என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன் .
தூரத்தில் எதோ சமிக்சை சத்தம் கேட்டது . எழுந்து ஓரம் சென்று எட்டிப்பார்த்தேன் . ஆமாம் , அதுதான் ... சற்று தூரத்தில். என் மனது குழந்தை போல மகிழ்ச்சியில் துள்ளியது . 'கொஞ்சம் தள்ளி நில் ' என்று சொல்லிக் கொண்டே என்னை சுதாரித்துக்கொண்டேன்,
அவ்வளவு வேகம் இல்லை ; மிதமான வேகம்தான். கூடவே ஒரு அற்புத தாள கட்டுடன் தான் நகர்ந்து கொண்டிருந்தது .
ஆனால் கூட்டத்தில் போகும் சில பள்ளி குழந்தைகள் , ஆட்டு மந்தை இதில் எல்லாம் சரியாக போகாது. ஒன்னிரண்டு கொஞ்சம் குதிக்கும் ,அதில் மாறுபட்டுத் தெரியும் .
அது மாதிரி எல்லாம் ஒரே தாளக்கட்டில் தான் போய்க்கொண்டு இருக்க நடுவே இரண்டு ,'டொல் ,டொல் ,'டொல் ,என்று வித்தியாசமாய் சத்தம் போட்டாலும் , முன்னாடி இருந்தது ' வா ,வா ' பேசாம ரொம்ப சத்தம் போடாம வா என்று பிடித்து கூட்டிச் சென்று கொண்டிருந்தது .
ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டே வந்தேன் . அறுபது வரை இருந்தது . இந்த தொடர் கொஞ்சம் நீளம்.தான். மகிழ்ச்சியாக இருந்தது .
கடைசி ஒன்றில் இருந்த ஒருவர் எட்டிப்பார்த்தார். பாவமாய் இருந்தது. அவர் ஒருத்தருக்கு அத்தனை பெரிய பெட்டியா ? பச்சைக் கொடியை அவர் அசைத்துக்கொண்டே இருக்க........... மெல்ல, மெல்ல என் கண்களில் இருந்து மறைந்து கொண்டிருந்தது அந்த ...."கூட்ஸ் தொடர் ரயில் வண்டி "..
- 1196