Feed Item
·
Added a news

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் கொழும்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில்.இடம்பெற்றுள்ளது.

இதில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதித் ஆணையாளர் சமூக ஊடகங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாகவே தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டோக் சமூக ஊடகங்களில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் அந்த நிறுவனங்களுடன் நாங்கள் நேரடி தொடர்பில் இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

  • 964