போராட்ட மாணவர்களின் செயற்பாடுகளால் நெருப்புக் குவியல்களாக மாறியுள்ள பங்களாதேஷ் நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரை தேடிக்கொண்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
‘பெண்கள் எமது பலம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று (09) கொழும்பு இலங்கை கண்காட்சி மற்றும் மகா மண்டபத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர் இந்த நாட்டில் பிறந்ததால் எமது நாட்டுக்கு அவ்வாறானதொரு கதி அப்போது ஏற்படவில்லையென நினைவுகூர்ந்த அவர், அன்றைய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிய போது அரசை அமைத்து நாட்டை மீட்டெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
- 851