மகாபாரத போருக்கு பிறகு தர்மர் நிறைய நன்கொடைகள் வழங்குவதன் மூலம் தன்னை உலகிலேயே ஒரு சிறந்த நீதிமானாக நினைத்து கொண்டார். கிருஷ்ணர் இந்த விஷயத்தில் தர்மருக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க எண்ணி, அவரை அசுவமேத யாகம் செய்ய சொன்னார்.
தர்மரும் யாகத்தை தொடங்கினார். அசுவமேத குதிரை, மற்ற பாண்டவர்களுடன் வலம் வர தொடங்கியது. பாண்டவர்களின் பராக்கிரமம் அறிந்த விஷயம் என்பதால் எல்லா மன்னர்களும் தர்மரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டனர்.
குதிரை மணிப்பூர் ராஜ்ஜியத்தை அடைகிறது. அந்த ராஜ்ஜியத்து அரசன் மயூரத்வஜன் சிறந்த கிருஷ்ண பக்தன்,.அவனுக்கு இந்த குதிரை கிருஷ்ணர் ஆதரிக்கும் பாண்டவர்களை சேர்ந்தது என்று தெரிந்து கொள்கிறான். ஆயினும் விட்டு கொடுக்க மனம் இல்லை. குதிரையை தடுத்து நிறுத்துகிறான். அவனது மகன் தாம்ப்ராதவஜன் பாண்டவகளுடன் போரிட்டு தோற்கடித்து சிறை பிடிக்கிறான்.
செய்தி கேட்டு தர்மர் கிருஷ்ணருடன் மணிப்பூர் விரைகிறார். கிருஷ்ணர், தருமரிடம் உன்னால் மயூரத்வஜனை தோற்கடிக்க முடியாது. அதனால் நாம் மாறு வேடத்தில் செல்வோம் என்று சொல்லி அந்தணர் வேஷத்தில் செல்கின்றனர். கிருஷ்ணர் அரசரிடம் வரும் வழியில் எனது மகனை ஒரு சிங்கம் பிடித்து வைத்துள்ளது. உனது உடலில் பாதியை தந்தால் என் மகனை மீட்க முடியும் ஆனால் உனது உடலை உனது மகனும் மனைவியும் தான் வெட்டவேண்டும் என்று சொல்கிறார்.
மயூரத்வஜனும் சம்மதிக்கிறான் அவன் கண்களில் கண்ணீர் வருவதை பார்த்த தர்மன் கண்ணீருடன் தரப்படும் தானம் தங்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல அவனோ தனது உடலில் ஒரு பகுதி மட்டும் தானே பயன்பட போகிறது மற்றொரு பாதி யாருக்கும் பயன்பட போவதில்லையே என்பதை நினைத்து தான் கண்ணீர் விடுகிறேன் என்று சொல்கிறான்.
தர்மரின் கர்வம் அடங்கியது. கிருஷ்ணரும் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்து, “கடவுளை வணங்கும் இடங்களில் “நீங்கள் த்வஜ ஸ்தம்பம் ஆகிவிடுவீர்கள்” என்று ஒரு வரத்தை வழங்கினார், எல்லோரும் உங்களை கடவுளுக்கு முன்பாக வணங்குவார்கள். என்று சொல்லிவிடை பெறுகிறார்.
கொடிமரம் ஜீவதாறு (உயிர் உள்ள மரம்) என்று ஒரு மரத்தில் செய்யப்படுகிறது.அது தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு அதில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி டிசைன்கள் செதுக்கப்படுகின்றன. மேலே மூன்று உலோக அடுக்குகள் அமைக்கபடுகின்றன. அதன் பெயர் மேகலா. அது மூன்று உலகங்களை அதாவது Bhur பூமி bhuva அண்டம் suvaha சுவர்க்கம் ஆகியவற்றை குறிக்கும் அதில் பாலி என்ற சிறிய மணி இருக்கும்.
மேலே மயூரத்வஜனை நினைவு கூறும் வகையில் ஆகாச தீபம் என்ற சிறிய விளக்கும் உள்ளது. அதில் எற்றப்படும் கொடிக்கு த்வஜபடம் என்றும் அழைக்கபடுகிறது. அதில் நந்தி,கருடன் ஆகியோர் படங்களோ அல்லது திரிசூலம் போன்ற ஆயுதங்களின் படங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.
கொடி ஏற்றுவதை த்வஜ ஆரோகணா என்றும் இறக்குவதை த்வஜ அவனத என்றும் சொல்லுவர்
கொடிமரத்தை சுற்றாது கோவில் பிரதிக்ஷனம் நிறைவு பெறாது.
- 988