எரிச்சல் வர மாதிரி கேட்பார்: சிச்சுவேஷன் கேட்டு துப்புவார்; கண்ணதாசன் பற்றி இளையராஜா கருத்து
சிச்சுவேஷன் என்ன என்று கேட்கவுடன், சிகரெட் பிடிப்பார். அதன்பிறகு துப்புவார். அவர் சிச்சுவேஷனை கேட்டு துப்புகிறாரா அல்லது எதற்காக துப்புகிறார் என்று தெரியாது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த கவியரசர் கண்ணதாசன், இளையராஜா திரைத்துறையில் அறிமுகமான புதிதில், அவர் டியூனை வாசித்து முடிக்கும் முன்பே அந்த பாடலுக்கான பல்லவியை சொனன்தாக இளையராஜாவே ஒரு மேடையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அதன்பிறகு படத்திற்கு கதை இல்லை என்றாலும், இளையராஜா இசை இருந்தால் போதும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்ற நிலை உருவானது.
இதன் காரணமாக பல புதுமுக இயக்குனர்கள் இளையராஜாவின் கால்ஷீட் கேட்டு அவரது அலுவலகத்தில் குவிய தொடங்கியுள்ளனர். இந்த காலகட்டத்தில் வெளியான படம் தான் நிறம் மாறாத பூக்கள். பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு, பாக்யராஜ் கதை எழுதியிருந்தார். சுதாகர், ராதிகா, விஜயன், ரதி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்த படத்தில் வரும் ‘’ஆயிரம் மலர்களே மலருங்கள்’’ என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இது குறித்து ஒரு மேடையில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, கண்ணதாசன் என்ன சுட்சிவேஷன் என்று கேட்பார். அவர் கேட்பதே நமக்கு எரிச்சல் வருவது போல் இருக்கும். இயக்குனரை கண்டுகொள்ளவே மாட்டார். சுட்சிவேஷன் என்ன என்று கேட்கவுடன், சிகரெட் பிடிப்பார். அதன்பிறகு துப்புவார். அவர் சுட்சிவேஷனை கேட்டு துப்புகிறாரா அல்லது எதற்காக துப்புகிறார் என்று தெரியாது.
அதன்பிறகு டியூன் போட்டுக்கியா இல்ல பாட்டு எழுதனுமா என்று கேட்டார். நான் டியூன் போட்டு இருக்கேன் என்று சொன்னவுடன் எங்க வாசி என்று சொன்னார். நான் வாசித்து முடிப்பதற்குள்ளாகவே பாடல் வரிகளை சொல்லிவிட்டார். நான் பாடும் டெம்போ வேற மாதிரி இருக்கு அவர் சொல்வது வேற மாதிரி இருக்கே எப்படி சிங்க் ஆகும் என்று யோசித்து பாடி பார்த்தால் சரியாக இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த பாடல் தான் ‘’ஆயிரம் மலர்களே மலருங்கள்’’ என்ற பாடல்.
- 1157