Feed Item
·
Added a post

பெண்கள் டைட்டாக போடப்படும் லெக்கின்ஸ், யோகா பேண்ட்களை அணிவது சரியா என்பது குறித்து ஃபிட்னஸ் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த லெக்கின்ஸால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்தும் அவர் கூறியுள்ளார். அப்படி அவர் என்னதான் கூறினார்? என்பதை பார்க்கலாம்.

பெண்கள் பொதுவாக லெக்கின்ஸ், டைட்ஸ் எனப்படும் ஆடைகளை அணிகிறார்கள். முதலில் தொளதொளவென பேண்ட் அணியப்பட்டது, பிறகு பட்டியாலா என்றார்கள். அதன் பிறகு கேதரிங் டைப் பேண்ட்கள் தைக்கப்பட்டு வந்தன. தற்போது பிளாசோ, குலோட்டீஸ் என விதவிதமான ஆடைகளை அணிகிறார்கள். இது பெண்களுக்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் இதில் ஆபத்துகள் நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான பேன்ட்களில் மிகவும் மட்டமான சிந்தடிக்குகளான பாலிஸ்டர், நைலான் மற்றும் ஸ்பான்டெக்ஸ் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உரசி உரசி தோலுக்கு அழற்சியை ஏற்படுத்தும்.

இதுகுறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் கூறியிருப்பதாவது: பெண்கள் லெக்கின்ஸ், யோகா பேண்ட்களை அணிவது சரியா, சரியில்லை என்றே நான் கூறுவேன். ஏனென்றால் யோனி, ஆசனவாய், தொடையின் இடுக்குகளில் பல்வேறு தொற்றுகளை இவை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் இளம் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டே உடற்பயிற்சி செய்கிறார்கள். உள்ளே எவ்வளவு வியர்த்தாலும் அது வெளியே தெரியாது. இந்த டைட் லெக்கின்ஸ்களை சின்தடிக் ஃபைபர்களை கொண்டு இந்த நிறுவனங்கள் தயாரிக்கின்றன. காற்றுக் கூட இந்த துணியில் செல்லாது. இதனால் பாக்டீரியா, ஃபங்கஸ் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக உள்ளே நுழைந்து அரிப்பு, வீக்கம், கொப்புளங்களை ஏற்படுத்தும்.

சில நிறுவனங்களோ இந்த ஆடைகள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் பை மற்றும் நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் PFAS என்ற ஆபத்தான கலவையை சேர்க்கிறார்கள். இந்த கலவை வியர்வையில் கலந்து சிறுநீரகம் மற்றும் மார்பக புற்றுநோயை கூட ஏற்படுத்தும் வல்லமை படைத்தது என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பெண்கள் பருத்தியினால் நெய்யப்பட்ட ஆடைகளை சற்று தளர்வாக அணிவதே உத்தமம். பெண்கள் யாரும் என்னை தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 986