Feed Item
·
Added a news

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது

அத்துடன் விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை வழங்கியிருந்தனர்.

  • 991