இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னார் தீவை அண்மித்த தென் கடல் பகுதியில் வைத்து குறித்த இந்திய மீனவர்கள் கைதாகினர். கைதானவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
000
- 971