Added a news
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஷ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மொஹமட் சிராஷ் இலங்கை குழாமில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
47 உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 80 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
- 621