Feed Item
Added a news 

தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக ஆணைக்குழுவின் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தேர்தல் காலப்பகுதியில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றமை தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 503