Feed Item
Added article 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த மே மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது. திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. ‘கருடன்’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் மற்றும் சிம்ப்ளி சவுத் (Simply South) ஓடிடி தளத்திலும் காணலாம்.

கருடன் திரைப்படம் வெற்றிகரமாக 50வது நாளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் 50வது நாளை ரசிகர்களுடன் கொண்டாட முடிவெடுத்த படக்குழு, சென்னை வி.ஆர்.மாலில் உள்ள திரையரங்குக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை நடிகர் சூரி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • 737