Feed Item
·
Added a news

சிங்கப்பூர் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி, சிங்கப்பூர் உள்நாட்டலுவல்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில், பல்வேறு துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புகளை மேம்படுத்துதலுடன், இருநாட்டு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் பற்றி இதன்போது கவனம்செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் மற்றுமொரு கலந்துரையாடலில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்த விளக்கமளித்த அமைச்சர், நாட்டில் தற்போது காணப்படும் முதலீட்டிற்கான வாய்ப்புகளை எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கு அவர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

குறித்த அமைப்பு உடனான ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தான் நம்புவதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் சிங்கப்பூர் இந்திய வர்த்த சம்மேளனம், தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் வலுவான தொடர்புகளைக் கொண்ட தொழில்முனைவோர்களின் வலுவான அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது

000

  • 468