Feed Item
Added a news 

நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு ஜெய்சங்கரின் முதல் விஜயம் இதுவாகும்.

  • 719