Feed Item
Added a news 

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் கடந்த 17ஆம் திகதியில் இருந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது பணயக்கைதிகளை விடுதலை செய்யுமாறும், தேர்தலை விரைவாக நடத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இப்போராட்டத்தின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெடித்த வன்முறையில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வன்முறையில் 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”போரைக் காரணம் காட்டி பொதுத் தேர்தலை 2026 ஆம் ஆண்டு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

 

  • 753