Feed Item
Added article 

நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஜாகீர் இக்பால் என்பவரை இந்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா மற்றும் நடிகை பூனம் சின்காவின் மகள் தான் சோனாக்ஷி. ஒரு ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் சோனாக்ஷி, பின்னர் தபாங் திரைப்படத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ப்லிம் ஃபேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் பெற்றார். 

தற்போது 37 வயதாகும் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஒருவழியாக தன்னுடைய காதலரை கரம்பிடிக்க தயாராகியுள்ளார். ஜாகீர் இக்பால் என்கிற துணை நடிகருடன் இவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார். இதை தெடர்ந்து இவர்களுக்கு ஜூன் 23ஆம் மும்பையில் மிகப்பிரமாண்டமாக மும்பையில் உள்ள பாஸ்டியனில் திருமண விழா நடைபெறவுள்ளது.

  • 1079