Feed Item
Added a news 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வருகின்றார்.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

  • 896