சிங்கப்பூரில் கொரோனா புதிய அலை மிக வேகமாக பரவி வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த 21ஆம் திகதியுடன் சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் நாளாந்தம் 250 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரமாக மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கும் சிங்கப்பூர் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
- 636