Feed Item
·
Added a post

ஒரு நாட்டில் மன்னன் நாட்டில் பத்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு பசுவும் பத்தாயிரம் பணமும் கொடுத்து! நன்கு வளர்த்து வர சொன்னான்.

ஒரு மாதம் கழித்து ! மாட்டிடம் இருந்து பால் கறந்து அரண்மனையில் இருக்கும் தொட்டியை அந்த பேர் பால் கறந்து நிரப்ப வேண்டும் என்று ஆணை!

அதே போல் பத்து பேருக்கும் பத்து மாடுகளும் பத்தாயிரம் கொடுக்கப்பட்டது.

இதை வாங்கிய ஒருவன் வீட்டுக்கு தேவையான பொருட்களை அந்த பணத்தில் வாங்கி செலவழித்து விட்டான். ஒரு மாதம் ஓடியது அரண்மனைக்கு பால் கறந்து கொண்டு சொல்லும் நாளும் வந்தது. காலையில் எழுந்து பால் கறந்து காய்ச்சி குடித்து விட்டான்.

அங்கே வந்த மனைவி ,,,,,,,,, யோவ் இப்ப அரண்மனை தொட்டியில் எப்படியா பால் ஊற்ற போகிறாய் என்று கேட்க!

அதற்கு அவன் சிரித்து கொண்டே சொன்னான் நான் என்ன நம் மன்னன் போல் முட்டாளா!

எல்லாரும் பால் ஊற்றுவார்கள் நான் மட்டும் நீரை பிடித்து தொட்டியில் ஊற்றுவேன்! நான் ஒருவன் நீர் ஊற்றுவதால் யாருக்கு தெரிய போகிறது என்று சொல்லிவிட்டு! தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து போய் தொட்டியில் ஊற்றினான்!

மன்னன் வந்து தொட்டியை திறந்து பார்க்க ! ஒரே அதிர்ச்சி ! தொட்டியில் பாலே இல்லை! வெறும் தண்ணீர் தான் இருந்தது.

பத்து பேரும் பாலுக்கு பதில் தண்ணீர் தான் ஊற்றி இருக்கின்றனர்!

  • 618