Feed Item
Added a news 

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றையதினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலின்  அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தநிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது முஹம்மது முக்பரின் கடமையாகும்.

முன்பதாக இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் துணை ஜனாதிபதியான மொஹமட் முக்பர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 543