Feed Item
Added a post 

ஒரு ராஜாவுக்கு 2 பஞ்சவர்ண கிளி குஞ்சுகள் வெகுமதியாக வந்தன.

ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு.அதில் ஒரு கிளி நல்லா பறந்து, வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.ஆனால் இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது.

ராஜா பெரிய அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல.

இதைக் கேள்விப்பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து "நான் பறக்க வைக்கிறேன்"னு சொன்னார் .

அடுத்த நாள் காலை ராஜா கண் விழிக்கும்போது, பறக்காத அந்த கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து சுத்திகிட்டிருப்பதைப் பார்த்தார்.

அவருக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்க?"ன்னு கேட்க,

அதுக்கு அந்த விவசாயி பணிவோட, "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே! மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். கீழே விழப்போகிறோம் என்று தெரிந்ததும்

கிளி தட்டுத்தடுமாறி பறக்க பழகிவிட்டது" என்றார்.

இப்படித்தான் நாமும் பல சமயங்களில் நமது சக்தியை உணராமல், ஒரே இடத்தில் அமர்ந்துட்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்யறோம். ஆனால் நாம சாதிக்க கூடியவை எண்ணற்றவை

சாதிக்க முடிந்தவை முடிவற்றவை....

  • 466