Feed Item
·
Added a news

இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் (Luhut Binsar Pandjaitan) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (19) Kura Kura Bali தீவிலுள்ள “United In Diversity” வளாகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், Global Blended Finance Alliance அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்துக்கான இலங்கையின் முன்னெடுப்பு (Tropical Belt Initiative), நீலப் பொருளாதாரம் (Blue Economy), கடற்பாசி தொழில்துறை போன்ற விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டது.

அதேபோல், தென்துருவ நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, சதுப்புநில பயிர்ச்செய்கை தொடர்பான ஒத்துழைப்பு, செயற்றிட்டத்துக்கான ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

ஒருங்கிணைந்த இருதரப்பு பணிக்குழுவை நிறுவுதல், இந்து சமுத்திர எல்லை நாடுகளில் (IORA) தற்போதைய தலைவராக இலங்கையின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

  • 431