Feed Item
·
Added a news

அமெரிக்காவில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் அதிக ஆபத்து கொண்ட பொதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் போன்ற சம்பங்களில் ஈடுபடுவோருக்கு அதிகமான தண்டனை வழங்கப்படுகிறது.

கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே உள்ளன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில்,

"கஞ்சா (marijuana) பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது. கஞ்சாவை அணுகுவதில் தோல்வியுற்றதால், பல உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த தவறுகளை சரிசெய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 484