Feed Item
·
Added article

அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பே கிடைத்தது. பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கேபிரில்லாவுக்கு கிடைத்தது.

இதனிடையே ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக அந்த சீரியல் பார்க்கப்படுகிறது. அந்த சீரியலில் காவியா என்ற ரோலில் கேப்ரில்லா நடித்து அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை கேபிரில்லா சில மாதங்களுக்கு முன்னர் லண்டனுக்கு ட்ரிப் அடித்திருக்கிறார்.

அங்கிருந்து ஸ்காட்லாந்துக்கு ரயிலில் செல்லும் போது அவரது ஐபோன் 15 ப்ரோ மொபைல் தொலைந்து விட்டதாம். ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அந்த போன் தொலைந்து விட்டதால் மிகுந்த அப்செட்டுக்குள்ளான கேப்ரில்லா அது பற்றி டிராவல் நிறுவனம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் அது கிடைக்கவே இல்லையாம். அதனால் ஏமாற்றத்துடன் இந்தியாவுக்கு திரும்ப வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

மொபைல் போன் தொலைந்த போனதால்...... ஏன் தான் வெளிநாட்டுக்கு சென்றோமோ என்ற அப்செட்டில் இருக்கிறாராம். 

  • 315