இட்லி வெந்திருக்குன்னு சொன்னா நம்பிக்கை...
இட்லி வேகலைன்னு சொன்னா அவநம்பிக்கை..
இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா பெண்ணுரிமை...
இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா
பத்திரிகை செய்தி...
இட்லியை எல்லோரும் சாப்பிட்ட பிறகு தான் நமக்குக் கிடைக்கும் னு சொன்னா
அடிமைத்தனம்...
இட்லிய வச்சு இட்லி உப்புமா செய்தால் நவீனத்துவம்...
இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா தேசபக்தி...
இட்லி ஒரு ரூபான்னு மெஸ்ல எல்லோருக்கும் கொடுத்தால் சமத்துவம்...
இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது
எதார்த்தம்...
இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா
முதலாளித்துவம்...
இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா பணக்காரத்தனம்..
இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா கண்டுபிடிப்பாளர்...
இட்லி பிடிக்காதவனை எனக்கு பிடிக்காதுன்னு சொன்னா இனவாதி..
இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா
அறிவாளி ..
ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா....ன்னு
என்மேல் கடுப்பாகி... என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது பயங்கரவாதம்...
அவ்வளவுதாங்க வாழ்க்கை
- 466