Feed Item
·
Added a news

இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் (18) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இதேவேளை, யுத்தத்தில் மரணித்த வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோரை நினைவுகூரும் வகையில் மரணித்தவர்களுக்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது

அத்துடன் 15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு கடற்படையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் 3,146 பேர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், 1,300 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு நாளை (19) பிற்பகல் பத்தரமுல்லை நாடாளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற உள்ளது.

முன்பதாக 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில்  புலிகளின் தலைவர்  பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் நிலவிய 30 வருட யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அப்போதைய அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 442