Feed Item
·
Added a news

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது

000

  • 463