Feed Item
Added a post 

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி மோசடியான முறையில் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (24) பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாக கூறி பணம் சம்பாதிக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு SLBFE இன் பதவி நிலை உயர் அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளா ர்.

இதேவேளை, அநுராதபுர த்தை அண்மித்த பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பௌத்த பிக்கு ஒருவரும் வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள புலனாய்வுக் குழுவுடனான கலந்துரையாடலின் படி, இவ்வாறான சம்பவத்தை யாராவது எதிர்கொண்டால், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு SLBFE இன் முறைப்பாடு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தை பெறுவதற்கு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000]

  • 262