Feed Item
Added a post 

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி கூறுகிறது.

சில பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சில தரப்பினரின் கூற்றுக்களை நிராகரிப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான பிரமிட் திட்டங்கள் தொடர்பில், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 83 (இ) பிரிவின்‌ ஏற்பாடுகளின்‌ நியதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரைக்‌ கோரியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 531