Feed Item
Added a post 

எத்தனையோ ஜென்மங்களில் எத்தனையோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலொழிய நமக்கு ஒரு ஞானியின் தரிசனம் கிட்டாது. அப்படியே கிட்டினாலும் அவர்கள் ஞானிதான் என்பதை உணர முடியாது. ஏதேனும் ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் ஞானிகள் பெரும்பாலும் சாதாரணமாக இருப்பார்கள் பார்ப்பதற்கு ஒரு பெரிதாக அவர்களிடம் எந்த ஒரு குணநலமும் தெரியாது. அதனால் எளிதில் ஏமாந்து போவோம். நஷ்டம் நமக்குத்தானே ஆக ஏதேதோ சந்தேகங்கள் வந்து நம்மை குழப்பி விட்டு ஒரு ஞானியிடம் இருக்க விடாமல் செய்து விடும். வேறு ஏதேதோ மாயைகளை எல்லாம் உண்மை என்று நம்பிப் போய் விடுவோம்.

ஜெய் யோகி ராம்சுரத்குமார்

-அன்னை மா தேவகி அவர்களின் சத்சங்கம்

  • 614