Feed Item
·
Added a news

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் 102 தொகுதிகள் இன்று வாக்குப்பதிவை எதிர்கொள்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் திப்ரூகர், ஜோர்ஹாட், காசிரங்கா, லக்கிம்பூர், சோனித்பூர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அம்மாநிலத்தில் ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 5 மணி முதலே ஏராளமான பெண்கள் வாக்குச் சாவடிகள் முன்பு வரிசையில் நின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பியதும் தங்கள் அன்றாட வேலைகளைத் தொடர்வதற்காக முன்கூட்டியே வாக்களிக்க வந்ததாக கூறினர்.

அசாம் மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளில் மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 43,64,859 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 42,82,887. மூன்றாம் பாலினத்தவர்கள் 123 பேர் உள்ளனர். இத்தேர்தலில் அசாமில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது மொத்தம் உள்ள 35 வேட்பாளர்களில் 11.4 சதவீதம் ஆகும்.

  • 336