Feed Item
Added article 

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது வாக்களிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், 'வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 மக்களவைத் தேர்தலில் அதிகமான இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவே, வாக்களிக்க தகுதி உள்ள இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.

அனைத்து மக்களும் குறிப்பாக, இளைஞர்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர் ரகுமானின் ’வாக்களிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு பதிவை பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • 321