Feed Item
·
Added a news

தமிழ் சிங்கள புத்தாண்டு காலம் மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய நுகர்பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இதன்படி, நெத்தலி , வெங்காயம், கோதுமை மா மற்றும் வெள்ளை அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒருகிலோ நெத்தலி 125 ரூபா விலை குறைக்கப்பட்டு 1200 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளது. பெரிய வெங்கயம் ஒரு கிலோ 55 ரூபா விலை குறைக்கப்பட்டு 320 ரூபாவுக்கும் கோதுமை மா ஒருகிலோ 7 ரூபா குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 4 ரூபா குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

வாடிக்கையாளர்கள் இன்று (11) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்,

  • 592