அளவீடு, தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் கடந்த மூன்று மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது எடைக்குறைவான பாண்களை விற்பனை செய்த 305 பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
994 பேக்கரிகள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் , குறைந்த எடை கொண்ட பாண் தயாரித்த மற்றும் விற்பனை செய்த 190 பேக்கரிகள் மற்றும் 115 கடைகள் அடையாளம் காணப்பட்டன. கொழும்பில் அதிகபட்சமாக 34 பேக்கரிகளும் 24 கடைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி,குறித்த பேக்கரிகள் மற்றும் கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- 731