Feed Item
·
Added a news

வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்களோடு உள்ள தங்களின் நடவடிக்கைளில் சில இடங்களில் சில அதிருப்திகள், அதனை தொடர்ந்து நியாயமற்ற இழப்புகளினையும் எதிர்கொள்ளவேண்டி வந்திருக்கலாம்.

இப்படியான சந்தர்ப்பங்களில் இதற்குரிய தீர்வு என்ன?

குறிப்பிடப்பட்ட வங்கி கிளையின் மேல் நிலை அதிகாரிகளோடு முதலில் பேசி தீர்வு காண முயல்வது. அங்கும் நியாயமான தீர்ப்பு கிடைக்காது விட்டால், என்ன பிரச்சனை என தங்களிடமிருந்து தகவலினை பெற்று தீர்வு வழங்கவென தயாராக அந்த குறிப்பிடப்பட்ட வங்கியின் நியாய மன்றம் (Ombudsman office) ஓன்று தயாராகவுள்ளது.

உதாரணமாக, T.D. CANADA TRUST BANK என்றால் அந்த வங்கியின் (T.D.Canada Trust banking ombudsman office ) சொல்லப்படும் நியாயமன்றத்துக்கு தங்களின் முறைப்பாட்டினை சமர்ப்பிக்கும்போது பிரச்சனையினை சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய, இரு பக்கமும் சொல்லப்படும் நியாயங்களினை பரிசீலனை செய்து தீர்த்து வைப்பதுவே அவர்களின் செயல்பாடாகும்.

அங்கும் தங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லையென்றால் அடுத்த இறுதி கட்டம் என்ன?

கனடிய நிதி அமைச்சின் கீழ் செயல்படும் வங்கிகளின் தலைமை நியாயமன்றத்திற்கு (Ombudsman for Banking Services and Investments) அப்பீல் செய்யலாம்.

அங்கு இறுதியாக அப்பீல் செய்யும்போது தங்களுக்கு சாதகமாகவும் தீர்வு வரலாம். சாதகமில்லாத தீர்ப்பாகவும் அமையலாம்.

இந்த நியாயமன்றத்தின் இணையத்தளத்தினுள் வழங்கப்பட்ட தீர்ப்புகள் பதிவுகளாக எவரும் படித்து கொள்வதற்காக உள்ளது. பல தீர்ப்புகளினை கனடாவின் ஆங்கில ஊடகங்கள் பகிரங்கத்துக்கு கொண்டுவந்தன.

அங்கு படித்த ஒரு சில கதையினை சொல்லுகின்றேன். ஓர் படிப்பினைக்காக கேளுங்கள்.

$90,000 டொலர் தொகைக்கு குறிப்பிடப்பட்ட ஒருவரின் பெயரில் அவரது வர்த்தக நிறுவனத்தின் கணக்கிலிருந்து (Business account ) காசோலை எழுதி கொடுத்தீர்களா? பணத்தினை கொடுக்கலாமா? என அந்த கனடாவின் சிறு வர்த்தகருக்கு அவரது வங்கியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் அவர் திகைத்துப்போனார்.

அவரது வர்த்தக நிறுவன அலுவலகத்திலிருந்து அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவர் ......

தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.

  • 654