Feed Item

தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 20 ஆம் தேதி

மேஷம் -ராசி:

உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

ரிஷபம் ராசி:

 மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது0 நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமிர்த்தமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

மிதுனம் -ராசி:

பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கடகம் -ராசி:

எதிலும் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம் -ராசி:

குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்புகள் குறையும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

 

 

 கன்னி -ராசி:

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

துலாம் -ராசி:

மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தொழில் சார்ந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விருச்சிகம்- ராசி:

கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல

தனுசு -ராசி:

மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் சில முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகரம் -ராசி:

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுபகாரிய தடைகள் விலகும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

கும்பம் –ராசி:

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். கூட்டாளிகளின் வழியில் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம் -ராசி:

உறவினர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளால் சேமிப்பு குறையும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 503