Feed Item

நேற்று நடந்த இசை நிகழ்ச்சியை காண குறிப்பாக ஹரிகரனை நேரில் காணும் ஆவலில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.

அங்கு காணக்கிடைத்த காட்சிகள் பெரிதும் மனதை வருத்தியது. கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் எடுத்த மண்ணில் தறிகெட்டு தறுதலையாக போதையில் ஒழுக்கம் கெட்டு நிகழ்ச்சியை காண வந்த இருபது வீதமான இளைஞர்கள்.....!

இவர்களால் நிகழ்சியை காண வந்த எண்பது வீதமான மக்களில் கணிசமான மக்கள் மன வெறுப்புடன் அங்கிருந்து விலகி சென்றதை அவதானிக்க முடிந்தது. காடையர்களாக அவர்களின் முக லட்சனங்கள்.... !

தமக்குள் சல்மானகான் சாருக்கான் என்ற நினைப்பில் குருவி கூடு கட்டிவிடும் அளவுக்கு கொண்டை வளர்ந்து கத்தரிக்கோல் சவரக்கத்தியே மாதக்கணக்கில் காணாத தறுதலைகள் நிறைவெறியுடன் நிகழ்வுகளை காண வந்திருந்தனர். அவர்கள் வரும் போதே தாய் தங்கைகளின் பிறப்பு உறுப்பையும் காவி வந்தவர்கள் போல் வாயை திறந்தால் தூசண ( கெட்ட) வார்த்தைகள் கொட்டோ கொட்டென கொட்டி தீர்த்தனர்.

அங்கு குடும்பசகிதம் வந்தவர்கள் இதனால் நிகழ்ச்சியை காணாமல் விட்டு அகன்றதை கண்டேன். அதோடு முன்னால் காட்சியை ஒளிப்பதிவை மேற்கொகொள்ள அமைத்த தற்காலிக வலுவில்லாத மேடையில் நிகழ்ச்சி ஒருகினைப்பாளர்களின் தயவான வேண்டுதலையும் புறம்தள்ளி அதன்மேல் ஏறி தம்மை பெற்றவர்கள் மனிதர் அல்ல கருங்குரங்குகள் தான் என பறைசாற்றி கொண்டிருந்த பலரை காணமுடிந்தது.

இதிலிருந்து நான் அவதானித்த விடயம் என்னவெனில் இலங்கை காவல்துறையால் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. மாகாணத்துக்கான காவல்துறை அதிகாரமும் மென் போக்கான சர்வதிகார சட்டமும் இருந்தால் தான் இந்த காடையர்களை நல்வழிப்படுத்த முடியும்.

யாழ்நகரத்தில் காணும் இடமெல்லாம் நிறை போதையில் இருபதுக்கும் இருபத்தி முன்று வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் அதோடு கஞ்சா பாவித்து வாய்கள் பிதற்றியபடி பலரை காணமுடிந்தது. இவ்வாறானவர்கள் சமூக விரோதிகளாக வகைப்படுத்தி  சிறையிலடைத்து புனர்வாழ்வு அளித்தல் அவசியம்.

இந்த அவலட்சணத்தையுடைய சமூகத்தை நாம் வைத்துகொண்டு தென்னிந்திய கூத்தாடிகளால் எமது இளைஞர்கள் கெட போகிறார்கள் என வசைபாடுவது தமிழ்த்தேசியவாதிகள் மல்லாக்க படுத்திருந்து துப்புவதை போல் உள்ளது.

விரைவாக ஒரு தீர்வை காண வேண்டிய அவசியத்தை சமூக சீரழிவு எம்மை சுட்டிக்காட்டுகிறது. இல்லையேல் 

படுகேவலமான சமூக கட்டமைப்பை கொண்ட சமூகமாக வடமாகாணம் உருவாகும். இதற்கான அடித்தளத்தை உருவாக்க அரசியல்வாதிகள் சமூக பற்றாளார்கள் நிலைமையின் வீரியத்தை அறிந்து விரைவாக செயல்படுதல் அவசியம். 

  • 1226