Feed Item

இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 4, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 18 ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=4621&dpx=1&t=1701662831

மேஷம்

Aries

 

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர் கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த  விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள். 

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=4622&dpx=1&t=1701662832

ரிஷபம்

Taurus

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலை பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4623&dpx=1&t=1701662833

மிதுனம்

Gemini

குடும்பத்தில் சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். சகோதரர் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருட்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஓய்வு வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=4624&dpx=1&t=1701662839

கடகம்

Cancer

 கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களின்  ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4625&dpx=1&t=1701662840

சிம்மம்

Leo

மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் நிதானம் வேண்டும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=4626&dpx=1&t=1701662840

கன்னி

Virgo

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஊக்கம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=4627&dpx=1&t=1701662840

துலாம்

Libra

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

image_transcoder.php?o=bx_froala_image&h=4628&dpx=1&t=1701662840

விருச்சிகம்

Scorpio

 

இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடிவரும். நலம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=4629&dpx=1&t=1701662841

தனுசு

Sagittarius

உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=4630&dpx=1&t=1701662841

மகரம்

Capricorn

இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். போட்டி மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=4631&dpx=1&t=1701662842

கும்பம்

Aquarius

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=4632&dpx=1&t=1701662842

மீனம்

Pisces

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 290