ஷாலு ஷம்மு சென்னையிலுள்ள சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தனது கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார். சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ திவ்யாவுடன் இணைந்து பொன்ராம் இயக்கிய 2013 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான வருடபடாத வாலிபர் சங்கம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அவர் நன்கு அறியப்பட்ட தமிழ்த் திரைப்படங்களான தமிழுக்கு என் ஒன்று அழுதவும் (2015), றெக்க (2016) மற்றும் திருட்டுப் பயலே 2 (2017) ஆகியவற்றிலும் தோன்றினார். பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது முழுவதுமாக மாடலிங் துறையில் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஷூட்களில் கலந்துகொண்டு மிகவும் கவர்ச்சியாக போட்டோக்களை எடுத்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகிறார் ஷாலு ஷம்மு.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு ஷம்மு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு படத்தில் நடிக்க தன்னை அனுகியதாகவும், உங்களுடைய கதாபாத்திரம் குறித்து விவாதிப்போம் என்று சொன்னார்கள். அவர்கள் கூறிய முகவரிக்கு சென்றேன். அங்கு அந்த நபரின் குடும்ப புகைப்படங்கள் இருந்தது. அப்போதுதான் நான் உணர்ந்தேன். அது அவரது வீடு என்று அவர் எனக்கு ஜூஸ் கொடுத்தார். படத்தை பற்றி பேசாமல் மற்ற விஷயங்களை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் அங்கு இருந்து பயந்து வந்து விட்டேன் என்றும், அந்த விஜய் தேவரகொண்டா பட இயக்குனர் மீது புகார் அளித்திருப்பதாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
- 361