சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது. சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் இந்த சூரிய கிரகணத்தை #இலங்கையின் வட பகுதிகளில் சில நிமிடங்கள் மாத்திரமே பகுதி அளவில் அவதானிக்க முடியும்.சூரிய கிரகணம் இலங்கை மற்றும் இந்திய நேரப்படி அக்டோபர் 25 அன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை நீடிக்கும்.இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது.இதனால், சிலருக்கு உடனடியாகவும், ஓரிரு நாட்களிலும் பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைதல் ஏற்படும். இதன்மூலம் ஏற்பட்ட பார்வை இழப்பை திரும்பக் கொண்டுவர முடியாது என்றும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- 347