படித்ததில் பிடித்தது.....
என் மகள் மாசமாக இருந்தாள். அவளுக்கு, வாந்தி அதிகமாகவே இருந்தது.
மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் சாப்பிட்டும் குறையவில்லை. என்ன செய்வதென்று புரியாமல், எங்கள் தெருவில் வசிக்கும்,
80 வயது மூதாட்டியிடம் ஆலோசனை கேட்டேன்.
" அவள் என்ன செய்கிறாள்?" என்று பாட்டி கேட்டார்.
நான் சொன்னேன் . வாந்தி அதிகமாயிருப்பதால் வேலைக்கும் போகவில்லை. அதே சிந்தனையுடன் இருக்கிறாள் என்றேன்.
அதற்கு அந்த பாட்டி, "சும்மா இருக்காமல் வேற ஏதாவது வேலை செய்ய சொல்லு" அப்படின்னு சொன்னார்.
சிறிதுநேரம் கழித்து பாட்டி கையில், #பல்லாங்குழி_கட்டையோடு வீட்டிற்கு வந்தார்.
என் மகளை அழைத்து புளியங்கொட்டைகளை வைத்து பல்லாங்குழி விளையாட்டை சொல்லிக் கொடுத்தார்.
விளையாட்டு புதுமையாக இருக்கவே, மகளும் அவருடன் சேர்ந்து விளையாடினாள்.
மாலையானதும், மகளிடம், 'நாளை_விளையாடலாம்...' பாட்டி கிளம்பிவிட்டார்.
ஒரு மணி நேரத்தில், 10 தடவை வாந்தி எடுக்கும் மகள் மூன்றரை மணி நேரம் வாந்தி எடுக்காமல் இருந்தாள்.
மறுநாள் காலை, சிறிது நேரமும், மாலையில் சிறிது நேரமும் #பல்லாங்குழி விளையாடியதால், வாந்தி என்ற உணர்வையே மறந்திருந்தாள்.
அப்போது பாட்டி, "கர்ப்ப காலத்தில், வாந்தி வருவது இயற்கை. அது படிப்படியாக குறையும். இந்த உணர்வு வராமலிருக்க, அக்கால கர்ப்பிணி பெண்களின் கவனத்தை திசை திருப்ப, சிறு வேலைகளும், எளிய விளையாட்டுகளையும் விளையாட செய்வோம்."
"அதில் ஒன்றுதான், பல்லாங்குழி விளையாட்டு. இது, விரல்களுக்கு நல்ல பயிற்சி தருவதுடன், நம் கவனத்தை சிதறாமல் ஒருமுகப்படுத்தும் தன்மை உடையது. இதன்மூலம் கைநடுக்கம் குறையும். இரவில், நன்கு தூக்கம் வரும். ஞாபகசக்தி அதிகரிக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கு,
வயிற்று வலி, இடுப்பு வலி தெரியாமலிருக்க, அக்காலத்தில் பல்லாங்குழி விளையாடசெய்வார்கள்..." என்றார்.
நம் பல்லாங்குழி விளையாட்டுக்கு பின், எத்தனை அர்த்தங்கள் இருக்கிறது என்று வியந்து போனேன்!
- 189